திராவிடம் பேசி பேசி என் குடும்பமே அழிஞ்சதுதான் மிச்சம்.. மனம் நொந்து பேசிய ராதாரவி.

Published : Feb 14, 2022, 05:48 PM IST
திராவிடம் பேசி பேசி என் குடும்பமே அழிஞ்சதுதான் மிச்சம்.. மனம் நொந்து பேசிய ராதாரவி.

சுருக்கம்

நான் திராவிட சித்தாந்தம் குடும்பத்தைச் சேர்ந்தவன், ஆனால் தற்போது என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் திராவிட சிந்தனையில் இருப்பவர்களுக்கு நான் எதிர்ப்பாளராகவே தெரிவேன். 

திராவிடம் பேசி பேசி என் குடும்பம் அழிந்ததுதான் மிச்சம் என  நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். தனது தந்தை எம். ஆர் ராதா அந்த வலையில் சிக்காமல் இருந்திருந்தால் அவர் இன்னும் உயர்ந்த இடத்திற்கு சென்றிருப்பார் என்றும், தொடர்ந்து திராவிடம் பேசி வந்ததால். அவருக்கு எந்த அங்கிகாரமும் கிடைக்காமல் போனது என ராதாரவி கூறியுள்ளார். 

சர்ச்சை பேச்சுக்கு புகழ் பெற்றவர் நடிகர் ராதாரவி. எந்த கட்சிக்கு சென்றாலும் சர்ச்சை பேச்சுகளுக்கு மட்டும் பஞ்சம் வைப்பதே இல்லை. திரைப்பட விழா முதல் திருமண விழா வரை அவரின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் நக்கலும் நையாண்டியுமாகவே இருக்கும். நயன்தாராவை பற்றி ஆபாசமாக பேசியதால் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இங்கேயும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பஞ்சாயத்துக்களில் மாட்டிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அங்கு இருந்த காட்சியை சரமாரியாக தாக்கி பேசுவதே ராதாரவியின் வழக்கம். அந்த வகையில் அவர் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக மட்டுமின்றி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றை விமர்சிப்பதில் ராதாரவி குறியாக இருந்து வருகிறார். ராதாரவி அவரது தந்தை காலம் தொட்டே திராவிட இயக்க பாரம்பரியம் கொண்டவர். ஆனால் திராவிட சித்தாந்தத்திற்கு நேர் எதிர் சித்தாந்தமாக பாஜகவின் அவர் இணைந்து செயல்பட்டு வருவது திராவிட பற்றாளர்கள் மத்தியில் அதிருப்தியையுப், கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

அவரது தந்தை நடிகவேள் எம்ஆர் ராதா தமிழக வரலாற்றில் நீடித்த பெயர் பெற்றவர், தந்தை பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி பகுத்தறிவு பரப்பும் வசனங்களை சினிமாவில் பேசி நடித்தது மட்டுமில்லாமல் பெரியாரின் தொண்டராகவே தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்து மறைந்தவர் ஆவார். இன்றும் தந்தை பெரியார் திடலில் நடிகவேள் பெயரில் அரங்கம் இருப்பதே அதற்கு சாட்சி. ஆனால் அவரது மகன் ராதாரவி தந்தையைப் போல அந்த அளவிற்கு சுயமரியாதை கருத்துக்களுக்கு மூடநம்பிக்கை ஒழிப்புக்கு சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தந்தையின் தொடர்ச்சியாக அரசியலில் திராவிட, இயக்கங்களில் இடம் பற்றி எங்கே வந்தார். துவக்கத்தில் திமுகவில் இயங்கிய அவர் வைகோ கட்சியில் இருந்து விலகிய பிறகும் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் பெரிய அளவுக்கு சோபிக்கவில்லை என்பதால் மீண்டும் திமுகவிற்கு வந்தார். தனது வீடு ஏலத்திற்கு வந்தப் பிரச்சினையில் கருணாநிதி உதவி  கைவிட்டதால் அதிருப்திக்கு ஆளானார்.

பின்னர் அதிமுகவில் இணைந்து  2002ல் சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். செய்தாலும் கடைசி காலத்தில் மீண்டும் திமுகவில் இணைந்த அவர் நடிகை நயன்தாராவை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அதனால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் அதிமுக பக்கம் வந்த அவர்கள் இறுதியாக பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக  தாக்கும் முறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், தனது தந்தை மற்றும் திராவிட பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியின் விவரம் பின்வருமாறு :-  நான் திராவிட சித்தாந்தம் குடும்பத்தைச் சேர்ந்தவன், ஆனால் தற்போது என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் திராவிட சிந்தனையில் இருப்பவர்களுக்கு நான் எதிர்ப்பாளராகவே தெரிவேன். 

ஆனால் பாஜகவினர் என்னை நட்புடன் அனைத்திக் கொள்கின்றனர். வழக்கமாக நான் திமுக மேடைகளில் பேசும்போது அவர்கள் எனக்கு கை தட்டுவார்கள், பின்னர் அதிமுக மேடையில் பேசினால் அவர்களும் எனக்கு கை தட்டுவார்கள். மொத்தத்தில் இது பெரிய விஷயம் அல்ல, திராவிட சித்தாந்தத்தை சேர்ந்தவன் என்றால் எதிர் சித்தாந்தத்திற்கு போகக்கூடாதா? தனது தந்தையின் வழியையே பின்பற்றி நான் அரசியல் செய்ய வேண்டும் என்பது சட்டமா? நான் கூறுவது சர்ச்சை ஆனாலும் பரவாயில்லை, என் தந்தை திராவிடம் திராவிடம் என பேசி எனது குடும்பம் அழிந்தது தான் மிச்சம். அவர் இது அனைத்தையும் தவிர்த்து தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருந்திருந்தால் சிறந்த நடிகர் அவர் இவர் என்று பல பதவிகள் பெருமைகள் அவரைத்தேடி வந்திருக்கும். ஆனால் அவருக்கு கடைசி வரை எதுவுமே கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரத்தையும் கூட இவர்கள் யார் தமிழ் தெரியாதவர்கள் எனக்கு கொடுக்கிறார்கள் என்று எனக் கூறி தூக்கி எறிந்து விட்டார். திராவிடம் என்று பேசியதால் என் தந்தைக்கு என்ன வளர்ச்சி இருந்தது? என்ன அங்கீகாரம் கிடைத்தது. இதோ அவருக்கு சிலை வைக்கக் கூட தயங்குகிறார்கள்  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!