கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் தொண்டர்களை சந்திக்க முடியாத நிலை இருந்து வந்தது. அதன்பின்னரும் நீண்ட நாட்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருந்ததால் தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இதனிடையே உடல் நலம் தேறி வர தொண்டர்களை சந்திக்க ஆரம்பித்தார் கருணாநிதி. இதையடுத்து கருணாநிதியை பிரதமர் மோடி, ரஜினி,கமல் என பல்வேறு பிரபலங்கள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியை சந்திப்பதற்காக, ஈரோட்டை சேர்ந்த பாப்பாத்தி என்ற 74 வயது மூதாட்டி பலமுறை முயற்சி செய்து வந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு தெரிய வர உடனே அவரை வீட்டுக்கு அழைத்து தேநீர் விருந்து கொடுத்து கருணாநிதியையும் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இது தொடர்பாக சமூக வளைதளங்களில் திமுக தொண்டர் ஒருவர் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இது தொண்டர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. அந்த கவிதை உங்களுக்காக...ஏ கிழவா !தானைத்தலைவா!நாட்டின் பிரதமர் வந்தான் நமட்டு சிரிப்பில்லை!நயவஞ்சகர்கள் வந்தனர்நளின பார்வையில்லை!பரட்டை வந்தான் பார்வையில் தெளிவில்லை!சப்பாணி வந்தான் சிரிப்பில்லை!உன்னால் பட்டம், பதவி எதையும் பெறாதபொன்நகையில்லா புன்னகையோடு பொக்கை கிழவி பாப்பாத்தி வந்தாள் உன்முகத்தில் புன்னகை!அவள் வாழ்த்தை கேட்டயா!நீ முதல்வராக வேண்டுமாம்!இனியும் உனக்கேன் ஒய்வு!பேசிப்பேசி எங்களை வாழவைத்த உனக்கு பேச்சு பயிற்சியா !ராமாயண இந்திரஜித்தும் மகாபாரத ஏகலைவனும் களத்தில் தயார்!ஆணையிட்டு அறிவாலயத்தில் ஓய்வெடுவெற்றிக்கனியை பறித்து உன்னிடத்தில் கொடுப்போம் !