எத்தனை கமலஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் கமலஹாசனுக்கு ஆரம்ப காலத்திலேயே சகுனம் சரியில்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சிகளிடம் கமலஹாசன் கட்டிப்புடி வைத்தியம் செய்து வருவதாகவும் கமலஹாசனின் அரசியல் செயல்பாடுகள் கேலிக்கூத்தாக மாறுமே தவிர விஸ்வரூபமாக மாறாது எனவும் விமர்சித்துள்ளார். நடிகர் கமலஹாசன் அதிமுக அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும் அமைச்சர்களை விமர்சித்து தனது அரசியல் செயல்பாடுகளை தொடங்கினார் கமல். அதையடுத்து மற்ற மாநில முதலமைச்சர்களை சந்தித்து அரசியல் குறித்த ஆலோசனைகளை கேட்டறிந்தார். இதையடுத்து திரையுலகில் நெருங்கிய நண்பரான ரஜினியிடம் அரசியல் நிலைப்பாடுகளில் விலகியே இருக்கிறார்.சில நாட்களுக்கு முன்பு முன்னாள் தேர்தல் அதிகாரியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் இன்று ரஜினியின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்க்கும் சீமானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே நாளை அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்க உள்ளார். இந்நிலையில் கமலின் அரசியல் வருகை குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, எத்தனை கமலஹாசன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனவும் கமலஹாசனுக்கு ஆரம்ப காலத்திலேயே சகுனம் சரியில்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சிகளிடம் கமலஹாசன் கட்டிப்புடி வைத்தியம் செய்து வருவதாகவும் கமலஹாசனின் அரசியல் செயல்பாடுகள் கேலிக்கூத்தாக மாறுமே தவிர விஸ்வரூபமாக மாறாது எனவும் விமர்சித்துள்ளார்.