ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை !! தெறிக்கவிட்ட மோடி !!

Published : Apr 13, 2019, 09:25 AM IST
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழக அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை !! தெறிக்கவிட்ட மோடி !!

சுருக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள  அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழல் என்றால் அது யாராக இருந்தாலும்  எந்த தயவு தாட்சண்யமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது  என தெரிவித்தார்.

அப்போது அதிமுகவை ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். நாங்களும் மாற்று அணியை தேர்ந்தெடுத்தோம். தற்போது, கூட்டணி வைக்க முடிவு செய்து போட்டியிடுகிறோம். இதற்கு முன்பும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து உள்ளது என தெரிவித்தார்.

அதிமுகவுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. நாடாளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு.க.அதனால்தான் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துச் கொண்டுள்ளோம் என்றும், ஒரு போதும் அந்தக் கட்சியை கட்டாயப்படுத்தி கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிமுக  கூட்டணியில் நாங்கள் சிறிய அளவிலான பங்குதாரர் மட்டுமே. தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைத்து உள்ளோம்.  அதே நேரத்தில் ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் முடிவடையாது என தெரிவித்த மோடி, தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்புடைய அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவித்தார்.

ஊழலைப் பொருத்தவரை நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்தாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது என கடுமையாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!