மக்களவை துணை சபாநாயகர் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரைக்கு வருமான வரித்துறை நடவடிக்கையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான தம்பிதுரைக்கு வருமான வரித்துறை நடவடிக்கையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் அதிகாரிகளும் ஆளும் கட்சி பிரமுகர்களை கண்டுகொள்வதில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில்தான் கரூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு நடத்தியது. இந்த ரெய்டு செந்தில் பாலாஜியை குறிவைத்து நடத்தப்படுவதாக முதலில் தகவல் கசிந்தது.
ஆனால் பிறகு தான் தெரிந்தது இந்த ரெய்டு செந்தில் பாலாஜியை குறிவைத்து நடத்தப்படவில்லை தம்பிதுரைக்கு வைக்கப்பட்ட குறி என்று. ஏனென்றால் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய இடங்கள் அனைத்துமே அதிமுக நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்கள். தேர்தல் செலவுக்கு அதிமுக நிர்வாகிகள் இடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை நான் வருமானவரித்துறை மொத்தமாக அள்ளிச் சென்றுள்ளது.
இதனால் மேற்கொண்டு எங்கும் பணத்தை கொண்டு சேர்க்க முடியாத சூழலும் தம்பிதுரை தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பிதுரை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போதைய சூழலில் முதலமைச்சராக தன்னால் தலையிட முடியாது என்று கூறி எடப்பாடி நெருங்கி விட்டதாக கூறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது தொடர்புகள் மூலம் வருமான வரித்துறை நெருக்கடியை சமாளிக்க தம்பிதுரை முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் டெல்லி தரப்பும் கூட தம்பிதுரைக்கு உதவ முன்வரவில்லை. தேர்தல் அறிவிப்பு அதற்கு முன்புவரை மோடியையும் பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து வந்த காரணத்தினால் தான் தம்பிதுரைக்கு வருமான வரித் துறை மூலம் நெருக்கடி கொடுக்கப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.