இஸ்லாமியர்களுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது !! மேனகா காந்தியின் சர்ச்சைப் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Apr 13, 2019, 8:48 AM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மேனகா காந்தி, முஸ்லீம்கள் அனைவரும் தனக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியயுள்ளார்.

உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். சுல்தான்பூரில் நடைபெற்ற ஒரு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மேனகா காந்தி, ''தொகுதியில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் எனக்கு ஓட்டு போட வேண்டும். தேர்தலுக்கு பிறகு என்னை தேடி வர வேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படும் என தெரிவித்தார்.. 

தேர்தலுக்கு பிறகு என்னைத்தேடி முஸ்லீம்கள் வந்தாலும் அவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் என தெரிவித்தார்.

இது ஒரு வகையில் கொடுத்து வாங்கும் கொள்கை போன்றதுதான். ஒன்றை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒன்றை திரும்ப எதிர்பார்க்காமல் இருக்க நாம் ஒன்றும் மகாத்மா காந்தியின் வாரிசுகள் இல்லை என்று மேனகா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இஸ்லாமியர்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.  

மேனகா காந்தியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், மக்களை சாதி மத அடிப்படையில் பிரித்தாள பாஜக நினைக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தது.

click me!