தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு ! டெல்லி போலீஸ் அதிரடி.!!

By Thiraviaraj RMFirst Published Apr 2, 2020, 9:22 AM IST
Highlights

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தற்போது கொரோனா வைராஸ் தொற்றால்  நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.இதன் காரணமாக மதக்குருமார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 

T.Balamurukan

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தற்போது கொரோனா வைராஸ் தொற்றால்  நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.இதன் காரணமாக மதக்குருமார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது ஸ்பீடாக அதிகரித்து வருகின்றது. மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் என்கிற இஸ்லாமியக் கொள்கை பரப்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தற்போது கொரோனா வைராஸ் தொற்றால் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 


தெலுங்கானாவில் இறந்த ஆறு பேர் மற்றும் காஷ்மீரில் இறந்த ஒருவர், இந்த கொள்கை பரப்புக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவும் அளவிற்கு காரணமாகவும், கவனக்குறைவாகவும் இருந்ததற்காக தப்லீக் ஜமாத் தலைமை மதகுருவான மௌலானா சாத், ஜீஷன், முப்தி ஷெஜாத், எம் சைஃபி, யூனஸ், முகமது சல்மான் மற்றும் முகமது அஷ்ரப் என ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ், இவர்கள் அனைவர் மீதும் தொற்று நோய் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும், மார்ச் 24 அன்று கொரோனா வைரஸ் தொற்று குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிவித்த பிறகும் தங்களுடைய உறுப்பினர்களை கூட்டம் நடைபெற்ற கட்டடத்திலே தங்க வைத்திருந்ததாகவும், இந்த ஆறு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பினார்கள்.அவர்கள் கொரோனா வைரஸ் அதிகரிக்கச் செய்திருக்கின்றனர். இந்த கூட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களோடு சேர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  

click me!