சீனாவில் கொரோனா வைரஸ் பற்றி முதன் முதலில் வெளியில் சொன்ன பெண் டாக்டர் திடீர் மாயம்.!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2020, 11:36 PM IST
Highlights

கொரோனா வைரஸ் குறித்து முன்பே தகவலை வெளியிட்ட பெண் மருத்துவர் கொரோனாவுக்கு 3பேர் பலியான நிலையில், முதன் முதலில் சார்ஸ் வைரஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்று சொன்ன டாக்டர் ஐ திடீரென மாயமாகியிருக்கிறார்.இச்சம்பவம் சீனா அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

T.Balamurukan

கொரோனா வைரஸ் குறித்து முன்பே தகவலை வெளியிட்ட பெண் மருத்துவர் கொரோனாவுக்கு 3பேர் பலியான நிலையில், முதன் முதலில் சார்ஸ் வைரஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்று சொன்ன டாக்டர் ஐ திடீரென மாயமாகியிருக்கிறார்.இச்சம்பவம் சீனா அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, வுகான் மருத்துவமனை ஒன்றில் பணி புரியும்  'ஐ பென்' என்ற பெண் டாக்டருக்கு 'சார்ஸ்' கொரோனா வைரஸ் என்று குறிப்பிடப்பட்ட ஒரு நோயாளியின் ரிப்போர்ட் கிடைத்தது. அதைப் படித்துப்பார்த்த டாக்டர் ஐ அதிர்ச்சி அடைந்தார்.இந்த வைரஸ் குறித்து தனது சக தோழியான டாக்டர் 'லி வென் லியாங்' என்பவருக்கு இந்த அதிர்ச்சிகரமான  தகவலை சொன்னார். ஆனால், டாக்டர் லியாங்  பொய்யான வதந்திகளை பரப்பியதாக சீன அரசால் தண்டிக்கப்பட்டார்.

அத்துடன் சார்ஸ் என்ற வார்த்தையை வட்டமிட்டு, படம் ஒன்றை தனது முன்னாள் வகுப்பு தோழர்களுக்கும், தனது துறையிலேயே உள்ள சக டாக்டர்கள் குழு ஒன்றிற்கும் அனுப்பியிருந்தார் ஐ பென்.  அந்த படம் வேகமாக சமூக ஊடகங்களில் பரவியது.இந்த வைரஸ் குறித்து தனது மருத்துவமனை அதிகாரிகளையும் எச்சரித்துள்ளார். 'சார்ஸ்' நோய் குறித்த தகவலை வெளியிட்டதால் மருத்துவமனை நிர்வாகம் டாக்டர் 'ஐ'யை கடுமையாக எச்சரித்தது.

 சீன ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த டாக்டர் 'ஐ' 'தான் சார்ஸ் வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்தும், அதை மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாக தெரிவித்திருந்தார்.இன்று கொரோனா வைரஸ் தாக்கி கொத்து கொத்தாக மக்களை வாரிவாரி சாப்பிடும் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் தண்டிக்கப்பட்டதற்காக வருத்தப்பட்டிருக்க மாட்டேன். என் நான்கு தோழிகளும் கொரோனா பாதித்து பலியான துக்கம் என்னை பேசவிடாமல் தடுத்து விட்டது.

இன்று என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் கண்டிப்பதைப் பற்றி அக்கறை காட்டியிருக்க மாட்டேன். நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லியிருப்பேன் 'என்று டாக்டர் ஐ கூறினார். அந்த பேட்டிக்குப்பின் டாக்டர் ஐ திடீரென மாயமாகியுள்ளார். இதனால், அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இப்போது கூட, முக்கிய அரசியல்வாதிகள் சீன அரசால் அறிவிக்கப்பட்ட தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை தவறாக இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர் 
 

click me!