
சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக போராடிய மாதர்சங்கம் அனிதா தற்கொலை பிரச்னையில் ஏன் போராட்டம் நடத்தவில்லை என டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு டி.ராஜேந்தர் மகன் சிம்பு 'பீப்' பாடல் ஒன்றை வலைதளத்தில் வெளியிட்டார். அதில் பெண்களை தரக்குறைவாக குறிப்பிடும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறி மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
மேலும் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறோம் என்றும் சிம்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் சந்தித்த டி.ராஜேந்தர், பீப் பாடலுக்காக என் வீட்டு வாசல் வரை வந்து முற்றுகையிட்டுப் போராடிய மாதர் சங்கத்தினர் அனிதா தற்கொலைக்காக ஏன் போராடவில்லை என கேள்வி எழுப்பினார்.
பீப் சாங் போராட்டம் சிம்புக்கு எதிராக தூண்டிவிடப் பட்ட சூழ்ச்சி வலை எனவும், இதுதான் உண்மை நிலை எனவும் தெரிவித்தார்.
மேலும், அனிதாவின் ஆன்மாவும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் எட்டப்பாடி பழனிசாமி அரசை மன்னிக்காது என்றும் டி.ராஜேந்திரர் தெரிவித்தார்.