
எம்.ஜி.ஆர் உருவம் பதித்த ரூபாய் நாணயங்கள் வெளியிட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமார் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி தெரவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நூறாண்டு விழாவை முன்னிட்டு ,எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த 100 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் வெளியிட அரசு முடுவு செய்திருக்கிறது
இந்நிலையில், சென்னை ராமவரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அவரது வளர்ப்பு மகள் சுதா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, எம்.ஜி.ஆரின் உருவம் பதித்த ரூ.5 ரூ.100 நாணயங்கள் வெளியிட காரணமாக இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைப்பதில் தவறில்லை என்றும் தமிழகத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் இணைந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
தினகரன் அணியில் இருப்பவர்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் நீட்டிலிருந்து அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.