
சினிமாக்காரன் ஏற்கனவே செத்துக்கிட்டு இருக்கான். ஒரு சினிமாவுக்கு பலமுனை வரியா...? ஆவியில வெந்தால்தான் இட்லி... அடிமடியில கை வைக்கிறார் அருண்ஜெட்லி என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது முதல், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரே வரிக் கொள்கையை ஏற்பதாகவும், ஆனால், கேளிக்கை விரியை எதிர்ப்பதாகவும் கூறி திரைத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க மூடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தலைமையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி. வரி கேளிக்கை வரி என்று இரட்டை வரி முறையை கையாண்டிருக்கிறார்கள். இதனால், அதிக பாதிப்பு வரும். இரட்டை வரி எங்களால் தாங்க முடியாத வலி.
சினிமாக்காரன் செத்துட்டு இருக்கான். ஒரு சினிமாவுக்கு பலமுனை வரியா. ஆவியில் வெந்தால்தான் இட்லி... அடிமடியில் கை வைக்கிறார் அருண் ஜெட்லி... இவ்வாறு கூறினார்.