
சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் இன்று இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் நீட் தேர்வு குறித்து கூறியதற்கு, எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
மேலும், நீட் தேர்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலு அளித்தார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து, திமுகவினர் இன்று இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்திருந்தால் விலக்கு அளிக்கப் பெற்றிருக்கலாம். இதனால் ஏராளமான மாணவர்கள் வெளியே இருப்பதை தவிர்த்திருக்கலாம் என்றார்.
சொந்தப் பிரச்சனையில் கவனம் செலுத்தியதால், மாணவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் குற்றம் சாட்டினார். கையாலாகாததனத்துக்கு பொறுப்பேற்க வேண்டியவர் விஜயபாஸ்கர்.
உடல்நலனை கெடுக்கக்கூடிய பான், குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்து, அதில் பங்கு போட்டுக் கொண்டவர்களில் அவரது பெயரும் இருக்கிறது என்று துரைமுருகன் கூறினார்.