அத்தி வரதரை சாக்காக வைத்து அதிமுகவை அசால்ட்டா தாக்கி பேசிய டி.ராஜேந்தர்..!

Published : Aug 10, 2019, 07:18 PM IST
அத்தி வரதரை சாக்காக வைத்து அதிமுகவை அசால்ட்டா தாக்கி பேசிய டி.ராஜேந்தர்..!

சுருக்கம்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

அத்தி வரதர் தரிசனம் முடித்துக்கொண்டு வேலூரில் திமுக வெற்றி பெற்றதை பற்றியும், அதிமுக பற்றிய கருத்தையும் தெரிவித்து இருந்தார் டி ராஜேந்தர்   

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்தி வரதரை காண்பதற்காக தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிகின்றனர். அந்த வரிசையில் பெரும் அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் அடங்குவர்.

இந்நிலையில் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்த டி ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் டி ராஜேந்திரன். அதில் அத்தி பூத்தாற்போல என்று சொல்வார்கள்... அந்த அளவிற்கு அதிசயமான ஒரு நிகழ்வு இது தான். தற்போது அத்திவரதர் பூத்து உள்ளார். அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.. அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும்... மக்கள் அத்தி வரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள்..

நடந்து முடிந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறவில்லை.. சொற்ப எண்ணிக்கையான வெறும் 8000 வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதை எப்படி மாபெரும் வெற்றியாக பார்க்க முடியும்? இது வெற்றி மட்டுமல்ல... இது ஒரு எச்சரிக்கை. திமுகவிற்கு மக்கள் முழுவதும் கொடுக்கவில்லை "கை"  இது ஒரு எச்சரிக்கை என அடுக்குமொழி வசனங்களை பேசி அசத்தினார்.


 
அதிமுக வை பற்றி தெரிவிக்கும் போது.... 

அதிமுகவில் இருப்பவர்களுக்கு ஆண்டவன் கொடுத்த பிச்சை; அம்மா போட்ட பிச்சை; மக்களுக்கு நல்லது செய்யுங்கள். பதவியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டும் குறியாக இல்லாமல் முடிந்தவரை மக்களுக்கு நல்லது செய்யுங்கள், 40 நாட்களாக அத்தி வரதர் தரிசனம் நடந்து கொண்டிருக்கிறது; லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்;மக்களுக்காக தற்போது சில ஏற்பாடுகள் செய்து வைத்து இருந்தாலும் இதற்கு முன்னதாக பெரும் பாடுபட்டனர் மக்கள், நாம் இருப்பதே மக்களுக்கு சேவை செய்ய தான். இரவு நேரங்களில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

லட்சக்கணக்கான மக்கள் வருகை புரியும் இந்த காஞ்சிபுரத்தில் வெளிச்சமாக இருக்க ஏதுவாக அனைத்து தெருக்களிலும் லைட் போட்டு இருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான சிறு சிறு உதவி செய்வதற்கும். உணவு அருந்துவதற்கும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இப்போது செய்திருக்கக்கூடிய ஏற்பாடு போதாது இன்னமும் செய்து இருக்கலாம் என தொடர்ந்து அடுக்கு மொழியில் பேசி அதிமுகவையும் தாக்கினார் டி ராஜேந்தர்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!