திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..!

Published : Apr 10, 2021, 04:37 PM IST
திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று.. அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் கடந்த சில மாதங்களாக அனல் பறக்க நடந்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவத் தொடங்கியது. பிரச்சாரங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் கூட்டம் கூட்டமாக பங்கேற்ற மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை காற்றில் பறக்கவிட்டனர். மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் சுற்றித் திரிந்தது கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்க தொடங்கியது.  தேர்தல் சமயத்தில் களம் காணும் வேட்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில்,  ஜெ.அன்பழகனின் தம்பியும் தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளருமான ஜெ.கருணாநிதிக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 

அதில், அவருக்கு தொற்று உறுதியானதைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் ஜெ.அன்பழகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!