கொளுத்தும் கோடை வெயில்.. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை. அதிரடி வானிலை.

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 2:36 PM IST
Highlights

தென் தமழகம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 10.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.

தென் தமழகம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் (1.5 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 10.04.2021: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். எனவும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11.04.2021: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  

12.04.2021: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 13.04.2021, 14.04.2021 : மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். 

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில்  மழை அளவு என்பது, நிலக்கோட்டை  (திண்டுக்கல் ) , வட்டணம் (ராமநாதபுரம் ) தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 
 

click me!