Kerala Gold Scam Case : தங்க கடத்தலில் முதல்வருக்கும் தொடர்பு உண்டு.. ஸ்வப்னா சுரேஷ் கொடுத்த அதிர்ச்சி

By Raghupati RFirst Published Jun 8, 2022, 10:12 AM IST
Highlights

Kerala Gold Scam Case : இந்தக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன்,  முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

கேரளா தங்க கடத்தல்

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித்குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ் கேரள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

இந்தக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன்,  முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த வழக்கில் ஜாமீனில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.

ஸ்வப்னா சுரேஷ் - வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து, நேற்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ஸ்வப்னா சுரேஷ், இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாகக் கூறினார்.  மேலும், கடந்த 2016-ம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்.  

கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என்று தமது வாக்குமூலத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் கூட ஊழல்.. திமுக ஊழல் பெருச்சாளிகள் கூடாரம்.! அண்ணாமலை ஆவேசம் !

click me!