கோயில்கள் பற்றி எரிவதற்கு காரணமே இதுதான்! வாய்க்கு வந்ததை பேசும் எஸ்.வி.சேகர்!

First Published Feb 8, 2018, 3:13 PM IST
Highlights
s.ve.shekher says about madurai temple fire accident


மடாதிபதிகள் மன வருத்தத்தால்தான் மதுரை கோயில் போன்ற துர்சகுணங்கள் ஏற்படுவதாகவும், பாவத்துக்கு பரிகாரம் உண்டு; சாபத்துக்கு பரிகாலம் இல்லை என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு கட்டுரை ஒன்றை வாசித்தார். அதில், நாச்சியார் குறித்து பாராட்டத்தக்க கருத்துக்களை பேசி வந்த அவர், வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆண்டாள் குறித்த கருத்தை மேற்கோள்காட்டி பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது குறித்து வைரமுத்து, விளக்கம் கூறியும் மன்னிப்பு கேட்டும், இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார். ஏற்கனவே வைரமுத்துவுக்கு கெடு விதித்து விட்டு உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்ட நிலையில், ஜீயர் மறுபடியும் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை பக்தர்கள் ஓய மாட்டார்கள் என்றும் ஜீயர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அதேபோல், நேற்று திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஸ்தல மரம் தீவிபத்துக்குள்ளாகியது.

இது குறித்து நடிகரும், பாஜகவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர், மடாதிபதிகள் மன வருத்தத்தில் உண்ணாவிரதம் இருப்பதால் மதுரை கோயில் தீ விபத்து போன்ற துர்சகுணங்கள் ஏற்படுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து எஸ்.வி.சேகர், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: மடாதிபதிகள் மன வருத்தத்தில் உண்ணாவிரதம் இருப்பதால் மதுரை கோயில் தீ விபத்து போன்ற துர்சகுணங்கள். பாவத்திற்கு பரிகாரம் உண்டு. சாபத்திற்கு பரிகாரம் இல்லை. ஆண்டாளின் சக்தியை வைரமுத்து உணரும் காலம் வெகு
தொலைவில் இல்லை. பக்தர்களின் வேண்டுகோளுக்காக ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சங்கராச்சாரியாரை கைது செய்ததால்தான் ராணி மாதிரி இருந்த ஜெயலலிதா மரணம் இன்று வரை சர்ச்சையாகி உள்ளது என்று அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!