அதிமுக ஆட்சியில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் 2018ம் ஆண்டு பரவிய தகவலை, நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் 2018ம் ஆண்டு பரவிய தகவலை, பாஜக பிரமுகரும், நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தேசியக் கொடி அவமதிப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது.
இதையும் படிங்க;- முதல் இணைப்பாக தேனி நிர்வாகிகள்.. ஓபிஎஸ் கோட்டையில் புகுந்து கெத்து காட்டு இபிஎஸ்..!
இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பாதிப்புி ஏற்படுத்தியதை மன்னிப்பின் மூலம் சரிகட்டிவிட முடியாது. தகவலை பகிர்பவரே அதனால் ஏற்படும் முழு பாதிப்புக்கும் பொறுப்பாவர். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விசாரணை நீதிமன்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இதையும் படிங்க;- தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பதா? ஆளுங்கட்சியை அலறவிடும் வானதி சீனிவாசன்
மேலும், இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று தேசியக்கொடி அவமதிப்பு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.