ஏ.பி. முருகானந்தம் தான் தமிழக பிஜேபி தலைவர்... அடித்து கூறும் எஸ்.வி.சேகர்..!

By vinoth kumarFirst Published Dec 22, 2019, 1:42 PM IST
Highlights

கடந்த 2014-ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால், அவர் வகித்து வந்த பாஜக தமிழக தலைவர் பொறுப்பு தமிழிசையிடம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற அவரது பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழிசையால் எந்த வெற்றியையும் பாஜகவால் தமிழகத்தில் பெரிதாக ஈட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

தமிழக பாஜகவின் புதிய தலைவராக இளைஞரணித் தலைவர் ஏ.பி. முருகானந்தம் நியமிக்கப்படுகிறார் என்று எஸ்.வி. சேகர் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த 2014-ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால், அவர் வகித்து வந்த பாஜக தமிழக தலைவர் பொறுப்பு தமிழிசையிடம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற அவரது பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, தமிழிசையால் எந்த வெற்றியையும் பாஜகவால் தமிழகத்தில் பெரிதாக ஈட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதனையடுத்து, தெலங்கானா ஆளுநராக தமிழிசை கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது. இதில், எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்டன. சீனியர்கள் என்ற முறையில் பொன்னார் மற்றும் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், திடீர் திருப்பமாக  தேசிய இளைஞரணி தலைவர் ஏ.பி முருகானந்தம் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. அவரையே தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கலாம் என்று டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ஜனவரி முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக நியமிக்க உள்ள ஏ.பி முருகானந்த்துக்கு எஸ்.வி. சேகர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஏ.பி. முருகானந்துக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

click me!