எதுக்கு இந்த பொழப்பு... மம்தாவின் உண்மை முகத்தை தோல் உரித்து காட்டிய எச்.ராஜா..!

By vinoth kumarFirst Published Dec 22, 2019, 1:02 PM IST
Highlights

குடியுரிமை சட்டத்துக்கு 2005-ல் ஆதரவு தந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2019-ல் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவது இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசியல் லாபத்திற்கே என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

குடியுரிமை சட்டத்துக்கு 2005-ல் ஆதரவு தந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2019-ல் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவது இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசியல் லாபத்திற்கே என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என் பிணத்தின் மேல் தான் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியும் என ஆவேசமாக கூறியிருந்தார். இதுதொடர்பாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். 

2005-ல் கூறியது என்ன?

அதில், கடந்த 2005ல் (4-8-2005) மக்களவையில் மம்தா, மேற்குவங்கத்தில், வங்கதேசத்தினரின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. இது பேரழிவுக்கு வழிவகுக்கிறது. தேர்தலில் வங்கதேசத்திலிருந்த ஊடுருவியவர்களும் ஓட்டு போட்டனர். இது மிகவும் பயங்கரமான விவகாரம். என்னிடம் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்களின் பட்டியலும், இந்திய வாக்காளர்கள் பட்டியல் இரண்டுமே உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எப்போது விவாதிக்க உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய மம்தா, குடியுரிமை மசோதாவை ஆதரித்தார்.

அந்தர் பல்டி:

ஆனால், அவரே தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தி வருகிறார். ‘என் ஆட்சியை வேண்டுமானாலும் கலைக்கட்டும். குடியுரிமை சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த அனுமதிக்க மாட்டேன். என் பிணத்தின் மேல் தான் அச்சட்டத்தை அமல்படுத்த முடியும்’ என மம்தா தற்போது கூறியுள்ளது, அரசியல் லாபத்திற்கே என்பது தெளிவாகிறது என எச்.ராஜா கூறியுள்ளார். 

click me!