பாஜக போடுற ஆட்டம் எங்க போய் முடியப்போகுதோ ஆண்டவா..!! குமுறும் காங்கிரஸ் மூத்த தலைவர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2019, 12:35 PM IST
Highlights

அதேபோல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான டி. ராஜா, மற்றும் சீதாராப் யெச்சூரி  ஆகியோரும்  சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  

பாரதிய ஜனதா கட்சி நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது .  திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .  பல்வேறு கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர் .  மேற்கு வங்கம்,  வடகிழக்கு  வாகனங்களில் போராட்டம் பற்றி எரிகிறது . தென்னிந்தியாவில்   கேரளா,  தமிழகம் கர்நாடகா,  போராட்டம் வலுவடைந்துவருகிறது. 

பாரதிய ஜனதா கட்சியானது நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை நடைமுறைபடுத்தியுள்ளதாக  காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி ,  செய்தியாளர்களிடம்  பேசுகையில் ,  அதாவது தடுப்புக்காவல் சட்டப்பிரிவு 144-ஐ பயன்படுத்தி  அநேக காங்கிரஸ் தலைவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர் குறிப்பாக அஜய் மகேன் மற்றும் அவரது குடும்பத்தினர்,  சந்திப் தீக்ஷித் அவரது மனைவி மற்றும் சகோதரி,  மற்றும் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர்  நதீம் ஜாவேத்  ஆகியோர்  சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் .  அதேபோல் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களான டி. ராஜா, மற்றும் சீதாராப் யெச்சூரி  ஆகியோரும்  சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  

உத்திரப்பிரதேச மாநிலத்தில்  இதுவரை   3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இணையதள சேவை முடக்குவதை வாடிக்கையாகி விட்டது .  மக்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு இக் குடியுரிமை சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் ,  பொது அமைதிக்காகவே 144 சட்டப்பிரிவு பயன்படுத்த வேண்டுமே ஒழிய தடுப்பு காவல் கைதுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது என அவர் கூறினார்.
 

click me!