குட்கா வழக்கில் அமைச்சருக்கு நெருக்கடி..!! அதிர்ச்சியில் அதிமுக..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 22, 2019, 11:04 AM IST
Highlights

சேகர் ரெட்டி நடத்திவரும் மணல் குவாரியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 20% பங்கு இருந்ததாகவும் ,  அவர் சுமார்  200 கோடி ரூபாய் வரையில் வரியேய்ப்பு செய்துள்ளார் . 

குட்கா முறைகேடு மற்றும் சேகர்  ரெட்டி விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறை தகவல்  வெளியிட்டுள்ளது.   இதனால்  அவருக்கு  நெருக்கடி அதிகரித்துள்ளது.   கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் 2011- 12 முதல்  2018- 19 ஆம் ஆண்டுவரை அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது . 

இந்நிலையில் சேகர் ரெட்டி ,  சீனிவாசலு ,  மாதவராவ் ,  உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி  கோரியும் ,  தனக்கு எதிராக  குற்றஞ்சாட்டப்பட்ட ஆவணங்களின் நகல்களை தனக்கு வழங்க  கோரியும் ,  வருமான வரித் துறையிடம் பலமுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில்  மனு அளிக்கப்பட்டது, ஆனால்  வருமானவரித் துறை இது குறித்து  முடிவெடுக்காமல் இருப்பதால் சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும்,  ஆவணங்களை வழங்கவுத்   உத்தரவிடகோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் .  இது தொடர்பாக வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .  இந்நிலையில்  குட்கா முறைகேடு வழக்கு,  மற்றும் சேகர் ரெட்டியுடனான தொடர்பு உள்ளட்ட  வழக்குக்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 

அதில் சேகர் ரெட்டி நடத்திவரும் மணல் குவாரியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 20% பங்கு இருந்ததாகவும் ,  அவர் சுமார்  200 கோடி ரூபாய் வரையில் வரியேய்ப்பு செய்துள்ளார் .  குட்கா முறைகேடு மற்றும் சேகர் ரெட்டி உடனான தொடர்பு குறித்து இறுதி அறிக்கையில் சேர்க்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது  மேலும் இவ்வழக்கு இறுதிகட்டத்தை எட்டி உள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்துள்ளது எவ்வளவு என்பது குறித்து விவரங்களை வருமானவரித்துறை விரைவில் நோட்டீஸ் வெளியிடும்  என்று தெரிகிறது .  இதனால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது . 

click me!