
எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனதால் அவை ஒரு வாரம் முடங்கியது. அதை அடுத்து மக்களவை நேற்று மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து பதாகைகளுடன் காங்கிரஸ் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 எம்.பி.க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பள்ளி கூடத்தில் வழிபாடு, 'யோகா' 'ஷாகா' நடத்தக் அனுமதிக்க கூடாது.. பள்ளிக் கல்வித் துறைக்கு கி.வீரமணி அட்வைஸ்.
இதேபோல் மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு மாநிலங்களவையை முடக்கியதால் 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக என்.ஆர்.இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு, சுஷ்மிதா தேவ், டோலாசென், உள்ளிட்ட 19 எம்.பி.க்கள் மீது விதி எண் 256ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலங்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து திமுக எம்.பி.க்கள் உட்பட 19 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, மக்கள் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல். பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச விரும்பினால் அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். எம்பிக்கள் சஸ்பெண்ட் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். வேறு வழியில்லாமல் அனுமதிக்கப்பட்ட முறையில் உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை. நாளை அவை தொடங்கும் போது சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.