
ஓ.பி.எஸ் கொளுத்தி போட்ட சரவெடியை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டார். ஆனால் கட்சியில் இருந்து நீக்கவில்லை.
இதையடுத்து ஓ.பி.எஸ் இன்று காலை மீண்டும் சசிகலாவுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்தார். இந்த பேட்டியின் போது தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்த ஜி.ராமசந்திரன் உடன் இருந்தார்.
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் சிங்கை ஜி.ராமச்சந்திரனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக தற்போது மதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன் புதிய செயலாளராக தேர்வு செய்யபட்டுள்ளார்.