டெல்லி செல்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள் - பிரணாப் முகர்ஜியை சந்திக்க முடிவு

 
Published : Feb 08, 2017, 03:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
டெல்லி செல்கிறார்கள் அதிமுக எம்.எல்.ஏக்கள் -  பிரணாப் முகர்ஜியை சந்திக்க முடிவு

சுருக்கம்

சசிகலாவின் பதவியேற்பை விரைவில் நடத்த வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சசிகலா எதிரிகளின் சதி செய்வதாகவும், அவர்களுக்கு நாம் யாரென்று காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

இந்நிலையில், சசிகலா பதவியேற்பை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தாமதப்படுவதாகவும், உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உத்தரவிடக் கோரியும் அதிமுக எம்எல்ஏக்கள் குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அளித்த பேட்டியில், ஆளுநர் அனைத்து விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார். தேவையான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார். எனவே இதுகுறித்து எவ்வித விமர்சனங்களும் தெரிவையில்லை என குறிபிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்