
ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுக எனும் எஃகு இரும்பு கோட்டை கொஞ்சம் கொஞ்சமாக கலகலத்து வருகிறது.
சசிகலா தரப்பு ஓ.பி.எஸ்க்கு கொடுத்த நெருக்கடியால் பொங்கி எழுத்துவிட்டார்.
இதனால் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் நேரடியாக ஓ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முக்கிய நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கைகோர்த்துள்ளனர்.
இவர்கள் மட்டுமன்றி மக்கள் செல்வாக்கு உள்ள பலர் ஓ.பி.எஸ்வுடன் கைகோர்த்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், திண்டுக்கல் மாவட்ட்ட செயலாளரும், ஜெயலலிதாவின் நால்வர் அணியில் ஒருவராக இருந்த நத்தம் விஸ்வநாதன் ஓ.பி.எஸ்ஸை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நத்தம் விசுவநாதன் கைகோர்த்ததால் திண்டுக்கல் அதிமுகவில் சசிகலா தரப்பு பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.