
நேற்று இரவிலிருந்து பன்னீர்செல்வம் கொளுத்தி போட்ட சரவெடியை தொடர்ந்து அதிமுக வட்டாரங்களில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
பன்னீர்செல்வமும் சசிகலாவும் பெரும்பான்மையை நிரூபிக்க களத்தில் இறங்கியுள்ளனர்.
அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவை முதல்வராக்குவது குறித்த கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் பன்னீர்செல்வம் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் ஆட்சியை வலுவாக நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நல்ல முடிவை எம்.எல்.ஏக்கள் எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
அனைத்து எம்.எல்.ஏக்களும் எனக்கு அதரவு தெரிவிக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும், அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் வரம்புகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் குறிபிட்டுள்ளார்.