'110 எம்.எல்.ஏக்கள் இரண்டு ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைப்பு' - செல்போன் பேசவும் கட்டுப்பாடு

 
Published : Feb 08, 2017, 04:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
'110 எம்.எல்.ஏக்கள் இரண்டு ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைப்பு' - செல்போன் பேசவும் கட்டுப்பாடு

சுருக்கம்

பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதையடுத்து சசிகலா தரப்பு ஆடிபோய் உள்ளது. இதையடுத்து சசிகலா தலைமையில் சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் 130 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஆனால் செய்தியாளர்கள் தரப்பில் 128 எம்.எல்.ஏக்கள் தான் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இன்னும் நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்கும்போது ஆட்சிக்கே பங்கம் விளைவிக்கும் வகையில் 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது.  

இதனிடையே, பன்னீர்செல்வம் எனக்கு எம்.எல்.ஏக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் எனவும் அதற்கான சூழ்நிலைகள் மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனால் கதிகலங்கிய சசிகலா எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைவிட்டு செல்லகூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் எம்.எல்.ஏக்கள் பன்னேர்செல்வம் வசம் சென்றுவிடுவார்கள் என பயந்து வீட்டுச்சிறை வைப்பதுபோல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இரண்டு நட்சத்திர ஓட்டல்களில் 60 அறைகள் எடுத்து அறைக்கு இரண்டு பேர் வீதம்  எம்.எல்.ஏக்களை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

செல்போன் பயன்படுத்த கூடாது என எம்.எல்.ஏக்களுக்கு கடுமையான கட்டுபாடுகளும் போடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை பேரம் தொடங்கியிருப்பதால் அரசியில் நிலவரம் சூடு பிடிக்க ஆரமித்துள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்