நான் ஆந்திரா ஆளுநரா... யாரு சொன்னா..? தப்பா சொல்லாதீங்க என்று சுஷ்மா சுவராஜ் விளக்கம்!

By Asianet TamilFirst Published Jun 12, 2019, 6:51 AM IST
Highlights

சுஷ்மா சுவராஜை ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வமற்ற செய்தியாக இவை இருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. 
 

ஆந்திர மாநில ஆளுநராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான எல்லா செய்திகளும் தவறானவை என முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 
 நரேந்திர மோடி முதல் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா இருந்தார். வெளியுறவுத் துறை பொறுப்பை  சிறப்பாகப் பணியாற்றினார் என்ற பெயரை எடுத்தார். ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சுஷ்மா, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகும் வெளியுறவுத் துறையைத் திறம்பட கவனித்துவந்தார்.


வெளியுறவுத் துறை என்பது அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய துறை என்பதாலும், உலக தலைவர்களை சந்திக்க வேண்டிய துறை என்பதாலும், தன்னுடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு நாடளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பே சுஷ்மா அறிவித்தார். அதன்படி நடந்து முடிந்த தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை. அவர் வகித்து வந்த வெளியுறவுத் துறை தற்போது சிவசங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆந்திரா மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களுக்கும் ஆளுநராக நரசிம்மன் இருந்துவருகிறார். அவருக்குப் பதிலாக  சுஷ்மா சுவராஜை ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதிகாரபூர்வமற்ற செய்தியாக இவை இருந்ததால், குழப்பம் ஏற்பட்டது. 
இந்நிலையில், இதுதொடர்பாக சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நான் ஆந்திரா ஆளுநராக நியமிக்கப்பட்டதாக வெளியான செய்திகள் எல்லாம் தவறானவை. வெளியுறவுத் துறை தொடர்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யாவை சந்தித்து பேசினேன். அதை வைத்து என்னை ஆந்திரா ஆளுநராக ட்விட்டர் நியமித்தது போதும்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். 

click me!