Jai bhim: யோவ் சூர்யா.. வன்னியர்களை ஏன் டச் பண்ண? 1 கோடி கேட்டு நோட்டீஸ் வரும் ரெடியா இரு. Adv கிருஷ்ணமூர்த்தி

By Ezhilarasan BabuFirst Published Nov 19, 2021, 2:03 PM IST
Highlights

ஒரு சப்ப மேட்டர் எடுத்து சூர்யாவும் ஜோதிகாவும் நல்ல பணம் சம்பாதித்து விட்டீர்கள், ஆனால் அதில் வன்னியர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு சப்ப மேட்டர் எடுத்து சூர்யாவும் ஜோதிகாவும் நல்ல பணம் சம்பாதித்து விட்டீர்கள், ஆனால் அதில் வன்னியர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். தானும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் அவர் சூர்யாவை எச்சரித்துள்ளார். எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தேங்க்யூ (நன்றி) என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் ஜெய்பீம் திரைப்படத்தில்  நடிகர் சூர்யா தேங்க் யூ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் என்றும், ஏன் இதை நீதி நாயகம் சந்துரு உனக்கு கற்றுக் கொடுக்கவில்லையா எனவும் கிருஷ்ணமூர்த்தி சூர்யாவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அத்துடன் 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. நாளுக்கு நாள் சூர்யா-- பாமக மோதல் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி நடிகர் சூர்யாவை கண்டித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

இந்த ஜெய் பீம் படத்துல அந்த அயோக்கிய போலீஸ்காரன் அந்தோணி சாமிக்கு அந்தோணி சாமி என்றே சொல்லிவிட்டு போயிருக்கலாம், ஏன் குருமூர்த்தி என பெயர் வைக்கிற, வழக்கறிஞர் சந்துருவை சந்துரு என்று சொல்கிறாய், பெருமாள் சாமி ஐபிஎஸ்சை பெருமாள் சாமி என்கிறார், பிறகு ஏன் அந்தோணிசாமியை குருமூர்த்தி என் பெயர் மாற்றம் செய்கிறாய்.? அதில் உனக்கு என்ன லாபம், அதில் ஏன் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை வைக்கிறாய், நீயும் உன் மனைவி ஜோதிகாவும் சேர்ந்து படத்தை தயாரித்துள்ளீர்கள், இது ஒரு சப்பை மேட்டர், அதேபோல வழக்கறிஞர் சந்துரு உனக்கு கோர்ட் நடைமுறைகளை சொல்லி கொடுத்தாரா இல்லையா என்று தெரியவில்லை.? எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் வாதத்தின் போது தேங்க்யூ என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் நீ தேங்க்யூ மை லார்ட் என்கிறாய் இதுவே முதலில் தவறு. 

ஒரு சப்பை மேட்டரை எடுத்து நல்ல கோடிகோடியாய் பணம் சம்பாதித்து விட்டீர்கள்.? ஆனால் அதில் ஏன் வன்னியர்களை வம்புக்கு இழுக்கிறாய். படம் எடுத்தோமா, ரிலீஸ் செய்தோமா, பணம் சம்பாதித்தோமா என்று இல்லாமல் ஏன்  வன்னியர்களை வம்புக்கு இழுத்தாய். இது உணக்கு அவசியா.? தேவை இல்லாமல் ஒரு சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாய், வழக்கறிஞர் பாலு 5 கோடி ரூபாய் கேட்டு உனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். என்னுடைய வன்னியர் கிளைன்ட் உன்னிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்ப சொல்லியிருக்கிறார், விரைவில் உனக்கு நோட்டீஸ் வரும், ஏதோ ஒரு விஷயத்தை எடுத்து கோர்ட்டு சீன்,  ஆட்கொணர்வு மனு, கொஞ்சம் வாதம், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காட்சி என படம் எடுத்து நல்ல பணம் சம்பாதித்து விட்டாய் பரவாயில்லை, இனிமேலாவது உண்மையை உண்மை என்று சொல் சூர்யா. எந்த ஜாதியையும் இழுக்காதே, எந்த மதத்தையும் இழுக்காதே. இந்தியன் தமிழன் என்று இரு, விரைவில் வழக்கு வரும் சந்திக்க தயாராக இரு இவர் அவர் கூறியுள்ளார். 
 

click me!