’ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விரைவில் பேசுவார் - அமைச்சர் கே.என்.நேரு

manimegalai a   | Asianet News
Published : Nov 19, 2021, 01:33 PM ISTUpdated : Nov 19, 2021, 01:53 PM IST
’ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விரைவில் பேசுவார் - அமைச்சர் கே.என்.நேரு

சுருக்கம்

  ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் பேசுவார் என்று  கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.   

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.மூன்று நாட்களாக அரசு திட்டங்கள் தொடங்கி வைப்பு, மக்கள் குறைதீர் முகாம் மற்றும் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வது என்று படு பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நகரம் முதல் கிராமம் வரை முதல்வர் மு.க ஸ்டாலினின் நலத்திட்டங்களுக்கு அணைத்து இடங்களிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் குறைகளை சரி செய்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் குறைதீர்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே முதல்வர் சொன்னது போல், அணைத்து மனுக்கள் மீதும் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அப்பிரச்சனை சரி செய்யப்படும்.அடுத்த ஆண்டு ஆத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக  மாற்றப்படும்.சேலம் மக்கள் கடந்த ஆட்சியின் மீது மிகவும் அதிருப்தியில் இருந்தார்கள்.

இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.முதல்வர் மக்களின் அணைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுப்போம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் பேசுவார் ’ என்று கூறினார்.

 

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு