அடேங்கப்பா திருவாரூரில் அழகிரிக்கு இத்தனை சதவீதம் ஆதரவா? வெளியானது சர்வே ரிசல்ட் ...

Published : Sep 10, 2018, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 09:20 AM IST
அடேங்கப்பா திருவாரூரில் அழகிரிக்கு இத்தனை சதவீதம் ஆதரவா? வெளியானது சர்வே ரிசல்ட் ...

சுருக்கம்

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அவருடைய தொகுதியான திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக தற்போது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதே சமயம் இந்த திருவாரூர் தொகுதியை தான் பிற கட்சிகளும் குறிவைத்திருக்கின்றன. 

கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அவருடைய தொகுதியான திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக தற்போது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதே சமயம் இந்த திருவாரூர் தொகுதியை தான் பிற கட்சிகளும் குறிவைத்திருக்கின்றன. 

இது ஒரு பக்கம் இருக்க இந்த திருவாரூர் தொகுதியில் அழகிரி போட்டி இட்டால் வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவரின் மகன் தயாநிதி அழகிரி ஒரு இரகசிய கருத்துகணிப்பு நடத்திவருகிறாராம். ஏற்கனவே திமுகவில் மீண்டும் இணைவதற்காக அழகிரி எடுத்த எந்த முயற்சியும் இதுவரை கை கொடுக்கவில்லை. 

இரங்கல் பேரணி உட்பட அவரின் எல்லாமுயற்சியுமே தோல்வியில் முடிந்திருப்பதால், இனி திமுகவில் சேரும் எண்ணத்தை விட்டு விட்டு தனக்கென ஒரு பாதை வகுத்துகொள்ளலாமா எனும் யோசனையில் இருக்கும் அழகிரி, இந்த திருவாரூர் தொகுதியை அதற்கு பயன்படுத்தி கொள்ளலாமா என அறிய தான் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

அதே சமயம் ஸ்டாலின் திமுக தலைவராக பதவி ஏற்ற பிறகு நடைபெறவிருக்கும் தேர்தல் இது என்பதால் , இதில் திமுக கட்டாயம் வெற்றி பெற வேண்டும் எனும் தீர்மானம், அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டிருக்கிறது திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில்  மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை போட்டி இட வைக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

திருவாரூர் தொகுதியில் தயாநிதி அழகிரி எடுத்த அந்த ரகசிய கருத்துக்கணிப்பின் முடிவின் படி, அழகிரி ஆதரவாளர்கள் யாராவது அங்கு போட்டி இட்டால்  12 சதவீத வாக்குகள் தான் அவர்களுக்கு கிடைக்கும் என்று தெரியவந்திருக்கிறது. 

அதே சமயம் அழகிரியே அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடுவாராக இருந்தால் 45 சதவீத வாக்குகளை அவர்கள் பெற முடியும் என கூறுகிறது இந்த கருத்துக்கணிப்பு.

இந்த முடிவு அழகிரிக்கு திருவாரூர் தொகுதி மீது இருக்கும் ஆர்வத்தினை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தனித்து போட்டி இட்டு ஜெயித்தது போல, தன்னாலும் ஜெயிக்க முடியும் என்றால் அது  அவருக்கு சந்தோஷமான விஷயம் தானே. 

மேலும் அரசியலில் தற்போது எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கும் அவருக்கு திருவாரூர் தொகுதி தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு என்றே படுகிறது.

திருவாரூர் தொகுதியில் மொத்தம் 20 சதவீதம் ஓட்டு வெள்ளாளர் சமுதாயத்தவருடையது அதில் பெரும்பாலானோர் ரஜினி ரசிகர்கள். அழகிரியும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள். 

இதனால் இந்த 20 சதவீத ஓட்டில் பெரும்பான்மை அழகிரிக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அதே போல 33 சதவீத ஓட்டு  ஆதிதிராவிட இனத்தவருடையது. அழகிரியின் மனைவியும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த வாக்குகளும் அவருக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம். திருவாரூர் தொகுதியில் 10 சதவீத ஒட்டு  வன்னியர் சமுதாயத்தவரிடமும், 10 சதவீத ஓட்டு முக்குலத்தோர் சமுதாயத்திடமும் இருக்கிறது. இதில் வன்னியர் சமுதாய ஒட்டு திமுகவிற்கு கிடைக்கும். 

ஆனால் அதிலும் அழகிரிக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர். முக்குலத்தோர் ஓட்டு எப்போதும் போல அதிமுக மற்றும் தினகரன் அணிக்கு தான். இதனால் சாதி ரீதியாக பார்க்கும் போதும் அழகிரிக்கு திருவாரூர் தொகுதியில் ஆதரவு அதிகம். கலைஞரின் மகன் என்பதால் அவருக்கான முக்கியத்துவம் அங்கு அதிகம். 

மேலும் ஸ்டாலின் தலைமைப்பொறுப்பில் இருக்கிறார் , அவரது மகன் உதயநிதி கூட அறக்கட்டளையில் பதவியில் இருக்கிறார். கட்சியில் ஒட்டு மொத்த அதிகாரமும் அவர்பக்கம் தான். இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது எந்தவித அதிகாரமும் இல்லாமல் அழகிரி இருக்கிறார். இதனால் மக்களின் கரிசனமும் அழகிரிக்கு தான். இந்த கூறுகளை எல்லாம் வைத்தும், திருவாரூர் தொகுதியில் நடத்தப்பட்டிருக்கும் கருத்துக்கணிப்பின் முடிவினையும் வைத்தும் பார்க்கும் போது அழகிரிக்கான வெற்றி வாய்ப்பே அங்கு அதிகம் என தெரியவந்திருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..