ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘#பணம்பறிக்கும்_பாமக’ - இதுக்கு முடிவே இல்லையா ? | ஜெய்பீம் Vs பாமக விவகாரம்

manimegalai a   | Asianet News
Published : Nov 15, 2021, 06:28 PM ISTUpdated : Nov 15, 2021, 06:30 PM IST
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ‘#பணம்பறிக்கும்_பாமக’ - இதுக்கு முடிவே இல்லையா ? | ஜெய்பீம் Vs பாமக விவகாரம்

சுருக்கம்

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர், வன்னியர் சங்கங்கள் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்  #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

 

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்ததனர்.படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜெய்பீம் திரைப்படத்தால், குறிப்பிட்ட சமுதாயம் வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளதாக கூறி, நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

 

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.’ஜெய்பீம்’ படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி, நடிகர் சூர்யா, ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்வேறு விதங்களில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ‘WeStandWithSuriya’என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்  இன்று #பணம்பறிக்கும்_பாமக என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.இதில் பாமக தலைவர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கலாய்த்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!