போபாலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த இஸ்லாமிய பெண்கள்.. முத்தலாக் தடை சட்டத்திற்கு நன்றி.

By Ezhilarasan BabuFirst Published Nov 15, 2021, 6:18 PM IST
Highlights

மத்திய பிரதேச தலைநகர் போபால் நகரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடி வருகை தந்திருந்தார். நவம்பர் 15 ஆம் தேதி பகவான் பிர்சா முண்டா நினைவாக மத்திய பிரதேசம் ஜன் ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 

போபால் வந்திருந்த பிரதமர் மோடியை நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் உற்சாகத்துடன் வரவேற்றதுடன், முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச தலைநகர் போபால் நகரத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மோடி வருகை தந்திருந்தார். நவம்பர் 15 ஆம் தேதி பகவான் பிர்சா முண்டா நினைவாக மத்திய பிரதேசம் ஜன் ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது பழங்குடியினருக்கான விழா ஆகும், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற பிரமர் மோடி வருகை தந்திருந்தார். மேலும் ஜம்போரி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹபிபுகஞ் ரயில் நிலையத்தையும் அவர் மக்களுக்கு அர்ப்பணித்தார். பழங்குடியின மக்கள் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜம்போரி மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர். இதில் கலந்துகொள்வதற்காக போபால் வருகை தந்த பிரதமர் மோடிக்கு சாலையில் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 12.30 மணியளவில் ஸ்டேட் ஹேங்கருக்கு வந்தார். அதன் பிறகு அவர் ஜம்போரி மைதானத்தை அடைந்தார். பழங்குடியினரின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர், அதன் பிறகு மேடையை அடைந்தார். அங்கிருந்து பிர்சா முண்டாவுக்கு அவர் வணக்கம் செலுத்தி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ​​அவர் ராணி கமலாபதி நிலையத்தை அடைந்து புதிய ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். முன்னதாக பிரதமர் மோடியுடன் நெருங்கி செல்லக்கூடிய கவர்னர் மங்குபாய் பட்டேல், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போலீஸ் அதிகாரிகள், பழங்குடியினர் என சுமார் 350 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடதக்கது. 

இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான முஸ்லீம் பெண்கள்  ஜம்போரி மைதானத்திற்கு வெளியில் திரண்டு வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  குறிப்பாக பிரதமர் மோடி முத்தலாக் தடை சட்டம் கெண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு அப்பெண்கள் வரவேற்பு இருந்தது குறிப்பிடதக்கது.  முத்தலாக் என்ற திருமண விவாகரத்து சட்டத்திற்கு தடைவிதித்து மோடி தலைமையிலான மத்திய அரசு முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்தது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி சட்டமானது. முத்தலாக் எனக்கூறி இஸ்லாமிய பெண்களை விவாகரத்து செய்வது சட்டப்படி குற்றம்  என்பதே அந்த சட்டத்தின் கூறாகும்.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடை சட்டம்  இஸ்லாமிய பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டைப் பெற்றுள்ளது. இச்சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு அவர்கள் பல்வேறு வகைகளில் நன்றி தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்புவது, அவர் வருகையின் போது அவரை திரண்டு இருந்து வரவேற்று வாழ்த்து கூறுவது என பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவரிசையில் இன்று போபால் வருகை தந்த பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!