ஜெய் பீமில் இயேசுவை வைக்காமல் மகாலட்சுமி காலண்டரை வைத்தது ஏன்..? இந்துன்னா நக்கலா: ஹெச்.ராஜா கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published Nov 15, 2021, 5:25 PM IST
Highlights

ஜெய்பீம் படத்தில் இயேசுவின் காலண்டரை வைக்காமல் மகாலட்சுமி காலண்டரை வைத்தது ஏன்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா?

ஜெய்பீம் படத்தில் இயேசுவின் காலண்டரை வைக்காமல் மகாலட்சுமி காலண்டரை வைத்தது ஏன்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.  ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், , "ஜெய்பீம் படம் வன்னியர் சமுதாயத்திற்கும் பட்டியல் சமுதாயத்திற்கும்  இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது"
  
சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரியிலும் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார். ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது. கருணாநிதி காலத்தில் கட்டபட்ட வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை முடி அதன் மீது கட்ட பட்டது. சட்டத்திற்க்கும் நியமங்களுக்கும் மரியாதை கிடையாது. சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும். 
 

இதையும் படியுங்கள்:- அவரை நான் தான் வைச்சிருக்கேன்... சின்னாபின்னமாக்கிட்டாரு..பெரும்புள்ளிகளை கதற விடும் ப்ளாக்மெயில் சத்யபாமா..!

டெல்டா மாவட்டங்கள் கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது. அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கோவில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது. கோவில் மீது அத்துமீறி செயல்பட்டாள் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் போடட்டும். அதை சந்திக்க தயார். ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்தாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியும்.

இதையும் படியுங்கள்:-  இவரை அவர் பாராட்ட... அவரை இவர் பாராட்ட... பிஸியான சூர்யா... குஷியான திருமா..!

நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி பேசி இருக்கலாம் வேளாங்கண்ணிக்கு போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அவர்கள் சொல்லவில்லை ஏனென்றால் அது அவர்கள் மதம்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்தோணிசாமி, கிறிஸ்தவர் எனக் கூறப்பட்ட நிலையில், அக்கினி கலசத்தை எடுத்து விட்டுவேறொரு காலண்டரை வைத்திருக்கலாம். அந்தோனிசாமி கிறிஸ்தவர் என்பதால் அவர் வீட்டில் லட்சுமி காலண்டரை எப்படி பொறுத்தி இருப்பார்? ஆகையால் ஜெய்பீம் படக்குழு மீண்டும் சிக்கலை சந்தித்துள்ளது. 

click me!