#BREAKING 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தி முடிவை வெளியிடுங்கள்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 22, 2021, 12:07 PM IST
Highlights

தமிழகத்தில் விடுபட்ட 9 புதிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 புதிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள், 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறவில்லை.  கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், இந்த தேர்தல்களை நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிமேல் கால அவகாசம் வழங்கப்படாது. மேலும் நாங்கள் மாநில அரசுக்கு 3 மாதம் அவகாசம் தருகிறோம். அதற்குள் 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தி முடித்து இருக்க வேண்டும், தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

click me!