தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா..? அரசு எடுக்கும் அதிரடி முடிவு..!

Published : Jun 22, 2021, 11:39 AM IST
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா..? அரசு எடுக்கும் அதிரடி முடிவு..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஜூலை மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கோட்டைவட்டாரத்தில் கூறுகிறார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. தெலுங்கானாவில் ஜூலை 1ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை பிற மாநிலங்களும் பின் தொடர வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இன்னும் சில தினங்களில் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. கல்வி தொலைக்காட்சி வீடியோக்களும் புதிய முறையில் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ஜூலை மாதம் பள்ளிகளைத் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கோட்டைவட்டாரத்தில் கூறுகிறார்கள்.

கொரோனா பரவலின் மூன்றாவது அலையை மனதில் கொண்டு முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கி பின்னர் படிப்படியாக பிற வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்கிறார்கள். இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!