கடந்த 10 ஆண்டு பிரச்சனையை 3 மாதங்களில் முடிப்பேன்.. ராயபுரத்தில் கெத்துகாட்டும் திமுக எம்எல்ஏ..

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 11:57 AM IST
Highlights

ராயபுரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்சினைகள் அனைத்தையும் 3 மாதத்துக்குள் முடிப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி  உறுதியளித்துள்ளார். 

ராயபுரம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்சினைகள் அனைத்தையும் 3 மாதத்துக்குள் முடிப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி  உறுதியளித்துள்ளார். சென்னை இராயபுரம் தொகுதி 50வது வட்டத்தில் சென்னை மாநகராட்சி சார்பாக பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் கட்டமைப்புகளை முழுமையாக தூர்வாருதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை  ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரிம்ஸ் மூர்த்தி இன்று துவக்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய திட்டத்தின் கீழ் மீனவ மக்கள் மற்றும் இதர மக்கள் அதிகம் வாழக்கூடிய ராயபுரம் பகுதியில் இன்று கழிவுநீர் தூர்வாரும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. ராயபுரம் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் சார்ந்த எந்த பிரச்சனைகளும் நேர்ந்திட கூடாது என்ற நோக்கத்தில் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய  திட்டத்தை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளோம் என்று கூறினார்.

சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று மூன்று மாதத்திற்குள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றும் , இன்று முதல் வரும் 30-ஆம் தேதிக்குள் கழிவுநீர் தூர்வாரும் பணி அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்று கூறினார். மேலும் சாலையோரங்களில் மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களிலும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது அதனை சீர் செய்யும் பணியை தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார். 

 

click me!