அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என உத்தரவிட கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதையும் படிங்க: சீமான் பங்கேற்ற பரப்புரையில் கல்வீச்சு… 6 பேர் படுகாயம்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் பொதுக்குழுவுக்கு இடைக்கால பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாஜகவின் உள்நோக்கம்.. ஆளுநர் வேலையை எப்போது செய்ய போகிறார்.? அமைச்சர் பொன்முடி அட்டாக்
இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் இரட்டை இலை சின்னம் யாருக்கு நிரந்தரமாக கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.