திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல் விவரகாத்தில் கே.என்.நேரு ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல் விவரகாத்தில் கே.என்.நேரு ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். திருச்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வருகை புரிந்திருந்தார். அப்போது அங்கிருந்த திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது. இதனிடையே திருச்சி எம்பி சிவாவிற்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் வலியுறுத்தியதோடு அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சிவா ஆதரவாளர்கள் அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டி அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டிற்கே குவிந்து வீட்டின் முன்பக்கம் நிறுத்தபட்டிருந்த காரின் மீது கற்களை வீசினர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் தற்கொலைப் படைகளாக மாறுவார்கள் - எம்.எல்.ஏ. ரவி பேச்சு
அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர். அங்கிருந்த இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த சம்பவத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல் திருச்சி எம்பி சிவாவின் வீடு மீது அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே திருச்சி காவல் நிலையத்தில் புகுந்த திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு தரப்பு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு திருச்சி சிவா ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காவல் நிலையத்திற்குள் இருந்த நாற்காலியை எடுத்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் வீசியுள்ளனர். இதை தடுத்த பெண் காவலர் சாந்தி காயமடைந்தார்.
இதையும் படிங்க: ஈபிஎஸ்-ன் செயல்பட்டால் ஈரோட்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது… டிடிவி தினகரன் கருத்து!!
அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் திருச்சி திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரும், திமுக பகுதிச் செயலாளருமான திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் அவர்கள் 4 பேரும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.