அதிமுக கட்சி தொண்டர்கள் திமுக அரசின் அராஜக போக்குக்கு எதிராக தற்கொலை படையாகவும் மாறுவதற்கு தயங்க போவதில்லை என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி எச்சரிக்கை விடுத்து ஆவேசமாக பேசியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் ஆளும் திமுக தலைமையிலான அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறாடாவுமான சு.ரவி தலைமை தாங்கினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் தமிழக முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிய திமுக தலைமையிலான பொம்மை அரசு பதவி விலக வேண்டுமென தெரிவித்து அதிமுகவினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவிகளை ஏற்றுவதில் தகராறு பஸ்டாண்டில் தாக்கிக்கொண்ட ஓட்டுநர்களால் பரபரப்பு
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறாட சு.ரவி தமிழக முன்னாள் முதல்வர் மீது திமுக அரசு பொய் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால் தமிழக மக்கள் திமுக அரசை விரைவில் அகற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். மீண்டும் அதிமுக ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலர வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா தமன்னா கைது
தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு உடனடியாக முன்னாள் முதலமைச்சர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடக்கும். அதிமுக கட்சி தொண்டர்கள் திமுக அரசின் அராஜக போக்குக்கு எதிராக தற்கொலை படையாகவும் மாறுவதற்கு தயங்க போவதில்லை என எச்சரித்தார்.