முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இலவச காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இலவச காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்ற நோக்கிலும் கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதையும் படிங்க: காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து திமுகவினர் வெறியாட்டம்.! யார் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு.? இபிஎஸ் கேள்வி
மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கடந்த 2022 செப்.15 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாகின் இலவச காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், இலவச காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த துயர செய்தியை கேட்டு ரொம்ப வேதனையா போச்சு!டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
மேலும் இதுக்குறித்த ஆய்வறிக்கை ஒன்றை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், இலவச காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்ட ஆயிரத்து 543 பள்ளிகளில், ஆயிரத்து 319 பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தால் பள்ளியில் மாணவர்களின் வருகை சதவீதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
Immensely pleased by the impact-report on CM 's Breakfast Scheme, first launched in Madurai. Shows 85% of the schools covered have increased attendance; every district has registered +ve impact. Children are our future, their well-being is foundational to social justice. pic.twitter.com/GTzEILpq7o
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai)