வாழ்த்துக்கள் பிரதர்... ரஜினி வீட்டிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பறந்த போன் கால்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 02, 2021, 07:47 PM IST
வாழ்த்துக்கள் பிரதர்... ரஜினி வீட்டிலிருந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பறந்த போன் கால்...!

சுருக்கம்

தமிழக தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி திமுகவில் 49 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 110 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகின்றனர். 

தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் 159 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதால், திமுக ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகியுள்ளது. தமிழக தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்குவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டார். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி