பாமக அலறவிடும் ஐ.பெரியசாமி... 10,66,050 வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை நோக்கி திமுக..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 7:22 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தமிழகம் முழுவதும் 75 இடங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 156 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. அதேபோல், அதிமுக 78 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதால் வெற்றி வாய்ப்பு  திமுகவிற்கு பிரகாசமாகியுள்ளது. 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில், திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 10,66,050 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். தற்போது நிலவரப்படி ஐ.பெரியசாமி 131,050 வாக்குகள் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் திலகபாமா 24,426 வாக்குகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம்  ஒரு லட்சத்தை கடந்துள்ளது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பெரிவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!