ஸ்டாலின் ஜெயித்தவுடன் பாமக ராமதாசுக்கு ஆப்பு ரெடி பண்ணும் ராமமூர்த்தி.. அதிரடியாக வைத்த கோரிக்கை.

Published : May 02, 2021, 07:06 PM ISTUpdated : May 02, 2021, 07:08 PM IST
ஸ்டாலின் ஜெயித்தவுடன் பாமக ராமதாசுக்கு ஆப்பு ரெடி பண்ணும் ராமமூர்த்தி.. அதிரடியாக வைத்த கோரிக்கை.

சுருக்கம்

போலிகளின் பிடியில் உள்ள வன்னியர் சொத்துக்களை கைப்பற்றி வன்னியர் சமூகம் வாழ்வாங்கு வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

பறிபோன மாநில உரிமைகளை தமிழக முதல்வராக மீட்டெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி வாகை சூடியதற்கு  அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியும், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என். இராமமூர்த்தி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த திராவிட இயக்கத்தின் மாண்பையும் மரியாதையையும் அழிந்து போகாமல் உங்கள் வெற்றியின் மூலம் மீண்டும் நிலை நிறுத்திய திமுக தலைவர், தமிழக முதல்வர் மாண்புமிகு முக.ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி மற்றும் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். 

பல ஆண்டுகளாக பறிபோய் உள்ள மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் மகத்தான பணிகள் உங்களுக்காக காத்திருக்கிறது. அதே நேரம், பல கோடி மக்களை கொண்ட வன்னிய சமூகத்தின் வாழ்க்கைத் தரம் உயர முறையான இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என நான் போட்ட வழக்கின் (WP No - 14025/2010) அடிப்படையிலும், பல அறவழி போராட்டங்களின் காரணமாகவும் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் நலத்துறை செய்த பரிந்துரையின்படி 15 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தி வன்னியர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அதே போல வன்னிய மக்களின் பொருளாதார மந்த நிலை மாற சமுதாயத்தை சேர்ந்த  முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை ஒரே குடையின் கீழ் சேர்த்து பொதுச் சொத்து வாரியம் அமைக்க வேண்டும் என நான் தொடுத்த வழக்கின் காரணமாக (WP No: 26565/2011) அமைக்கப்பட்ட பொதுச் சொத்து வாரியம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். 

போலிகளின் பிடியில் உள்ள வன்னியர் சொத்துக்களை கைப்பற்றி வன்னியர் சமூகம் வாழ்வாங்கு வாழ வழி ஏற்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, உங்கள் தலைமையில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்ல மீண்டும் வாழ்த்துவதிலும், ஆதரவு தருவதிலும்  அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியும், வன்னியர் கூட்டமைப்பும் மகிழ்ச்சி அடைகிறது. என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!