கலாநிதி மாறனுக்கு இவ்வளவு சம்பளமா ? இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்கும் சிஇஓ இவர்தான் !!

Published : Aug 11, 2019, 01:57 AM IST
கலாநிதி மாறனுக்கு இவ்வளவு சம்பளமா ? இந்தியாவிலேயே அதிக ஊதியம்  வாங்கும் சிஇஓ இவர்தான் !!

சுருக்கம்

சன் நெட் ஒர்க் குழுமத்தின்  தலைவர் கலாநிதி மாறனுக்கு ஆண்டு ஊதியமாக 87.50 கோடி ரூபாயும், அவரது மனைவியும் சன் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான காவேரி கலாநிதிக்கு ஆண்டுக்கு 87.50 கோடி ரூபாயும் ஊதியம் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.       

தென் தென் இந்தியாவின் மிகப் பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக சன் நெட் ஓர்க் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கலாநிதி மாறன் செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி காவேரி கலாநிதி எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்று வருகிறார்.

அவர்கள் இருவரின் 2018 ஆம் ஆண்டுக்கான ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இருவருக்கும் ஊதியமாக 13.83 கோடியும், போனசாக 73.67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்குபவர்களாக இந்த ஜோடியாத்தான்  திகழ்ந்து வருகிறது.இதே போல் சன் நெட் ஒர்க் நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான பங்குத் தொகையாக 295.56 கோடியாக அதிகரித்துள்ளது. இதனிடையே கலாநிதி மாறனின் மகள் காவ்யா கலாநிதி, சன் நெட் ஒர்க் நிறுவனத்தின் இயக்குநர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சன் நெட் ஒர்க் நிறுவனம் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் சானல்கள் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் சன் ரைசர்ஸ் ஹைதிராபாத்  என்ற கிரிக்கெட் டீமையும் நடத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!