காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைவிட முக்கியத்துவம் கொடுத்தது இந்தப் பிரச்சனைக்குத்தானாம் !! காரிய கமிட்டி கூட்டத்தில் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Aug 11, 2019, 1:07 AM IST
Highlights

ஜம்மு-காஷ்மீரில்  என்னதான் நடக்குது ? அது தொடர்பான முழு விவரங்களை பாஜக அரசு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார் . அதே நேரத்தில் காங்கிரஸ்  தலைவர் தேர்வை ஒத்திவைத்துவிட்டு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடுத்து தனது தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. ஆனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில், காங்கிரஸின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடந்தது.

இந்த  கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் பாதியில் வெளியேறினர்.  புதிய காங்கிரஸ் தலைவர் தேர்வில் நானும் ராகுலும் கலந்துகொள்வது சரியாக இருக்காது. காங்கிரஸ் தலைவர் தேர்வில் தங்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது  என கூறிவிட்டு  சோனியா காந்தி வெளியேறியதாக தெரிகிறது.


இந்த நிலையில் இரவு 11 மணியளவில் தலைவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர் காரிய கமிட்டி நிர்வாகிகள். அதன்படி, சோனியா காந்தியே இடைக்கால காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்தார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை சோனியாவே இடைக்கால தலைவராக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே காங்கிரஸ் தலைவரை தேர்தெடுப்பதற்காக கூடிய காரிய கமிட்டி கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் பிரச்சனை தொடர்பாகத்தான் அதிகம் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள்,  ஜம்மு-காஷ்மீரில் விஷயங்கள் மிகவும் தவறாகப் போகின்றன என்று சில தகவல்கள் வந்துள்ளன. எனவே நாங்கள் தலைவர் தேர்வை ஒத்திவைத்துவிட்டு ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதம் செய்தோம். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் என்ன நடக்கிறது என்பதை பிரதமர் தெளிவுபடுத்துவது முக்கியம் என தெரிவித்தனர்.

click me!