
ரஜினி வீட்டில் சுக்ரன் உட்கார்ந்து கொண்டுள்ளார் என்றும், அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது என்று ரஜினி ரசிகர் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைஞானம் கூறியுள்ளார்.
நடிகா் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மன்றர் ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய ரஜினிகாந்த், சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, என்று தமிழக அரசியல் குறித்து பேசினார். அவரின் இந்த பேச்சு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலா படம் மற்றும் 2.0 படபிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த், ரசிகர்களுடனான தனது இரண்டாம் கட்ட சந்திப்பை இன்று தொடங்கியுள்ளார். இந்த சந்திப்பு வரும் 31 ஆம் தேதி வடை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.
ரசிகர்கள் சந்திப்புக்கு முன்னதாக ரஜினி பேசும்போது, தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்றார். மக்களைவிட ஊடகங்களே, எனது அரசியல் பிரவேசம் குறித்து அதிக ஆர்வாத்தில் உள்ளதாக கூறியிருந்தார்.
தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் கலைஞானம், ரஜினி வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார். அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கியவர். அவ்வளவு நல்ல மனிதர். ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது என்று கூறினார்.
இயக்குநர் மகேந்திரன், யாருக்கும் துன்பம் தரும்படி ரஜினி நடந்து கொள்ள மாட்டார் என்றார். எதிலும் நிதானமாக இருப்பவர்களால்தான் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும். அந்த நிதானம் ரஜினியிடம் அதிகம் உண்டு என்று மகேந்திரன் கூறினார்.