தற்கொலை எண்ணத்திலிருந்த இளைஞர்... தடாலடி முடிவெடுத்த முதல்வர் எடப்பாடி..!

By Thiraviaraj RMFirst Published May 23, 2020, 10:37 AM IST
Highlights

’உதவில்லை என்றால் தற்கொலை தான் முடிவு’எனக் கதறிய இளைஞருக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகாக அவரை பலரும் புகழந்து வருகின்றனர். 
 

’உதவில்லை என்றால் தற்கொலை தான் முடிவு’எனக் கதறிய இளைஞருக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகாக அவரை பலரும் புகழந்து வருகின்றனர். 

பிற மாநிலங்களை விட கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களையும் கவனித்து தனக்கு வரும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டர் கணக்கை டேக் செய்து பாலா என்ற இளைஞர், தனது அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு வைரஸ் அறிகுறி உள்ளது. நெஞ்சு வலியால் கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்புகிறார்கள், வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவுங்கள் ஐயா. இல்லையெனில் தற்கொலை தான் முடிவு”என்று தனது செல்போன் நம்பரையும் அதில் சேர்த்து பகிர்ந்து இருந்தார். 

இதற்குப் பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’கவலைப்பட வேண்டாம் தம்பி’ என்று ஒரு வார்த்தையில் ஆறுதல் சொல்லிய அவர், அந்த இளைஞருக்கு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரை டேக் செய்து உத்தரவிட்டார்.

கவலை வேண்டாம் தம்பி. அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். https://t.co/A11ycTyiVk

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu)

இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், “சம்பந்தப்பட்ட நபரிடம் பேசிவிட்டோம். அவர் கடலூரைச் சேர்ந்தவர். உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ட்விட்டரில் உதவி கேட்ட இளைஞருக்கு முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கும், சுகாதாரத் துறை செயலாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

click me!