எடப்பாடி பழனிச்சாமி காலையிலேயே அதிரடிமேல் அதிரடி..!! நகர் பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதி.

By Ezhilarasan BabuFirst Published May 23, 2020, 10:22 AM IST
Highlights

தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.  ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் (19-5-2020 ) அன்று முதல் இயங்குவதற்கு நான் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளேன் .

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நகர் பகுதிகளிலும்  நாளை (மே.24) முதல் காலை 7மணி முதல் இரவு 7மணி வரை சலூன் கடைகளை திறக்கலாம் எனவும் குளிர்சாதன வசதி கொண்ட கடைகளுக்கு அனுமதி இல்லை, சளி, இருமல், காய்ச்சல் உள்ளோரை அனுமதிக்க கூடாது எனவும்  தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் :-  மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்  நோய் தொற்று தடுப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது ,  மேலும் கொரோன வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்துவருகிறது .  தற்போது பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.  ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் (19-5-2020 ) அன்று முதல் இயங்குவதற்கு நான் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளேன் .

தற்போது முடித்திருக்கும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை மாண்புமிகு அம்மாவின் அரசு கனிவுடன் பரிசீலித்து பெருநகர சென்னை காவல்துறை  எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர,  இதர  மாநகராட்சிகள் நகராட்சிகள்  பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்கள் (24-5-2020 ) அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் ) இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது , எனினும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்கள்  இயங்க அனுமதி கிடையாது , தடைசெய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடி திருத்தம் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்த கூடாது . ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள்  (19-5-2020 ) அன்று முதல் இயங்குவதற்கு அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட ஊரக பகுதிகளை தவிர தமிழ்நாட்டின் அனைத்து ஊரக பகுதிகளில் தற்போது அழகு நிலையங்களும் (24-5-2020) முதல் தினமும் காலை 7 மணி முதல்  மாலை 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. 

இந்த முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக  இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நிலையங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் , சளி ,  இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள்ளே அனுமதிக்கக் கூடாது .  வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும் முகக் கவசங்கள் அணிவதையும் உறுதி  செய்யுமாறும் ,  கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் ஒரு நாளைக்கு 5  முறை கிருமி நாசினியை அளிக்குமாறும் ,  வாடிக்கையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுவதை உறுதி செய்யுமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன். குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது . மேலும் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகள் தனியாக வழங்கப்படும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!